Saturday, August 23, 2025

National

spot_img

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 87-ஆம் ஆண்டுபிறந்தநாளில் ஐம்பெரும் விழா விழா

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பிறந்தநாள் விழா.

திண்டிவனம்: கோனேரி குப்பம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கல்லூரியில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இராமதாஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடுதல், கைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு, சூரிய மின்சக்தி அமைப்பு திறப்பு, சிலம்பம் விளையாட்டு, நிறுவன நாள் என ஐம்பெரும் விழாவாக நேற்று கல்லூரியில் கொண்டாடப்பட்டது. மேலும் கல்லூரி வளாகத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து சூரிய சக்தி அமைப்பு திறப்பு விழா, கைப்பந்துஅரங்கம் திறப்பு விழா, உலக சாதனை நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட கல்லூரி மாணவ பங்கேற்ற சிலம்பம் ஆகியவற்றை அவர் துவக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ராமதாஸ் படம் பெரிய அளவில் வரையப்பட்டு அதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவரது முக வடிவ அமைப்பிற்கு ஏற்றவாறு நின்றனர். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் ஜி.கே மணி, இராமதாஸ் மகள் ஸ்ரீ காந்திமதி, அறங்காவலர் குழு உறுப்பினர் பேராசிரியர் சிவப்பிரகாசம், கல்லூரி முதல்வர்கள் வீரமுத்து, அசோக் குமார், ஜெயபிரகாஷ், நிர்வாக அலுவலர் சிவா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து இராமதாஸ் மற்றும் சரஸ்வதி அம்மையார் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். மேலும் இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

International

RELATED ARTICLES