
விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மயிலம் அடுத்த வீடூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார் வீடூர் கிளை செயலாளர் ராஜா துவக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் ராஜேந்திரன் பிரசாத், அப்துல் வஹாப் அதாயி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், விழுப்புரத்திற்கு வந்த தமிழக முதலமைச்சரிடம் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையான வீடூர் அணை செப்பணிடுவது குறித்து புகார் அளித்ததன் பேரில், ரூபாய் 38 கோடி மதிப்பீட்டில் வீடூர் அணையின் 9 மதகுகளும் சீரமைக்க நிதி ஒதுக்கிய அரசுதான் திராவிட மாடல் அரசு என பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, வழக்கறிஞர் சேதுநாதன், மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ரவி, மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நவீன் குமார் நன்றி கூறினார்.