
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே லாரி, கார், அரசு பேருந்து அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து அரசு விரைவு பேருந்து இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டு சாலை அருகே வந்து கொண்டிருந்த பொழுது முன்னாள் சென்ற லாரியானது அதை முந்தி சென்ற காரின் பக்கவாட்டில் மோதியதில் கார் சுழன்று சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி நின்றது. விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. விபத்தில் சிக்கிய காரின் மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் காரில் வந்த இருவர் படுகாயம் அடைந்து திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற லாரியை ஒலக்கூர் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.