
வழிப்பறியில் ஈடுபட்ட அந்த நபர் ஒயிட் பெனாயில் ஸ்பிரேயர் பாட்டிலை தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார். தன்னை பிடிக்க வருபவர்கள் மீது அதனை ஸ்பிரே செய்யும் போது அந்த பெனாயில் கண்ணில் பட்ட உடன் எரிச்சலை ஏற்படுத்தும். அப்போது அதனை சாதகமாக பயன்படுத்தி அவர் தப்பித்து விடலாம் என அதனை வைத்துள்ளதாக தெரிகிறது.)
திண்டிவனம், ஜூலை 30
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நியாய விலை கடை ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம்,
திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா. இவர் தென்பசியார் பகுதியிலுள்ள நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், நேற்று இவர் நியாய விலை கடையில் பணியாற்றி முடித்து விட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் அவர் கையில் வைத்திருந்த பையை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அந்த பையில் ரூபாய் பத்தாயிரம், செல்போன், பில் போடும் மெஷின், கடையின் சாவி ஆகியவை இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார் அவரை விரட்டி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த பொழுது, அவர் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரது மகன் ரகுமான் (22) என்பதும், இவர் சுகுணாவின் கையில் இருந்த பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து மயிலம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மீது 40 -க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது