
டாக்டர் கலைஞர் 7- ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் 7- ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திண்டிவனம் செஞ்சி சாலை தண்ணீர் தொட்டி அருகிலிருந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே எஸ் மஸ்தான் தலைமையில் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன் முன்னிலையில் அமைதி பேரணி தொடங்கி அம்மா உணவகம் அருகே அமைக்கப்பட்டு இருந்த டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நினைவு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாசிலாமணி சேது நாதன், மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர்,மாவட்ட பொருளாளர் ரமணன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் திண்டிவனம் அசோகன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், முன்னாள் நகர செயலாளர் கபிலன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பி கே பி ரமேஷ், பிர்லா செல்வம், நந்தகுமார்,நகர துணை செயலாளர் ஓவியர் கௌதமன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.