
திண்டிவனத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் முன்னிலையில் தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மொட்டையன் தெருவில் அமைந்துள்ள முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இல்லத்தில் மேல்மலையனூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட துறிஞ்சிப்பூண்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முத்தரசி வடிவேலன் தலைமையில் தி.மு.க தே.மு.தி.க பா.ம.க உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி சுமார் 20க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
மேலும் அ.தி.மு.க.,வில் இணைந்தவர்களை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இந்த நிகழ்வில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன், மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.