
திண்டிவனம், ஆக.18-
திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர தின விழாவையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர்.பி. ரமேஷ் தலைமை தாங்கி காங்கிரஸ் கட்சியின் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் வழங்கினார். பின்னர் மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன், திண்டிவனம் நகர கமிட்டி தலைவர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் மெடிக்கல் செல்வம் வரவேற்றார்.
வட்டார துணைத்தலைவர் சீதாபதி, மாவட்ட துணைத் தலைவர் இருதயராஜ், வட்டாரப் பொருளாளர் பலராமன், மாவட்ட செயலாளர்கள் தாமோதரன், பாபு, மகிழ காங்கிரஸ் காளியம்மாள், எஸ்.சி., துறை மாநில நிர்வாகி உதயானந்தன், அகூர் சரவணன்,
பொன்னுசாமி, விஜய கீர்த்தி, அன்பழகன் தட்சிணாமூர்த்தி,
லட்சுமணன், கூட்டேரிப்பட்டு சண்முகம்,
மெடிக்கல் வெங்கட், ஜெய்கணேஷ்,
வழக்கறிஞர்கள் அஜிஸ், பொன்ராஜா,
கருணாநிதி, முத்து நாராயணன், அறிவு முருகன், தேவசகாயம்,
அய்யன், ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.