
சரஸ்வதி கல்லூரியில் ரக்ஷா பந்தன் விழா.
திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள சரஸ்வதி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு கல்லூரி முதல்வர் முனைவர் வீரமுத்து அவர்களுக்கு திண்டிவனம் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலைய பொறுப்பு சகோதரி ருக்மணி அவர்கள் ராக்கி அணிவித்து இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். இதில் கல்லூரி நிர்வாக அலுவலர் முனைவர் சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தண்டபாணி உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.