
திண்டிவனத்தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு பூங்கா
முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி 6 வது வார்டு அண்ணா தெருவில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நகர மன்ற உறுப்பினர் ஷேக் தில்ஷாத் பேகம் அக்பர் பேக் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செஞ்சி.மஸ்தான் எம்.எல்.ஏ கலந்து கொண்டு விளையாட்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் நகர செயலாளர் கண்ணன்,பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அப்சர்பேக்,மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் ஆடிட்டர் பிரகாஷ்,திமுக நிர்வாகிகள் சூரிய பிரகாஷ், ஏழுமலை, விக்னேஷ்வர் சிங், சரவணன் ,சுரேஷ்,திருவேங்கடம்,மன்சூர், அர்ஷத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.