
திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் செஞ்சி மேல்களவாய் கூட்ரோட்டில் உள்ள GK திருமண மண்டபத்தில்
மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் ப சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில்
மண்டல பொறுப்பாளர் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களும்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே எஸ் மஸ்தான் அவர்களும் கலந்து கொண்டு அனைவருக்கும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் SIR குறித்து விளக்கம் அளித்து உரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியில்
மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா. மாசிலாமணி, சேது நாதன் உள்ளிட்ட திமுக
மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் அணி அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.