
வானூர் அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை தருவதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாலியல்புகாரில் உள்ளவரை கைது செய்யக்கோரி திண்டிவனம் நகரப் பகுதியில் அதிமுகவினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருவக்கரை பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார், இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் பிள்ளை உள்ள நிலையில், கடந்த 5 வருடங்களாக தனது கணவரை பிரிந்து பிள்ளையுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் அதே ஊரைச் சேர்ந்த திமுக வானூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார், புகாரை பெற்ற போலீசார் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஸ்கரனை கைது செய்யக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்,அதன்படி திண்டிவனத்தில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தலைமையில் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும், விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமையில் திண்டிவனத்தில் முக்கிய வீதியான நேரு வீதியிலும், அதிமுகவினர் 10-அடி உயரம் உள்ள பெரிய மெழுகுவர்த்தி ஒன்றை தயார் செய்து அதை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து மயிலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர், அப்போது மண்டபத்திற்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தலைமையில் தரையில் அமர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக மண்டபம் உள்ளே அழைத்து சென்றனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.