
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் சாரம், மேல்பேட்டை, பாஞ்சாலம், கீழ் ஆதனூர், மங்கலம், சாத்தனூர் ஆகிய கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாற்றம், மின் இணைப்பு மாற்றம், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அரசு சார்ந்த அனைத்து துறைகளிலும் பொதுமக்களின் குறைகள் மனுக்களாக பெறப்பட்டது.
முகாமில் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் வரவேற்றார். தோட்டக்கலைத்துறை காரல் மார்க்ஸ் முன்னிலை வகித்தார்.
செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான், ஒலக்கூர் ஒன்றிய குழு தலைவர் பாங்கை ஜி. சொக்கலிங்கம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜாராம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எழிலரசி ஏழுமலை ஆகியோர் முகாம் குறித்து விளக்கி பேசினர்.
முகாமில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுபலட்சுமி, வனஜா ராஜ்குமார், கௌதமி, பேபி கமலா, சிவா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.
இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேளாண் துறை சார்பில் விதைகளின் தொகுப்பையும் வழங்கிய அவர் மகளிர் உதவித்தொகை காண மனுக்களை பெற்றார்.