அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த இருவர் கைது

0
16
கைதானவர்கள் குமரவேல், குணா

முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் ஒதுங்குவதற்காக ஹாரன் அடித்ததால் அரசு பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் பேசி பேருந்து கண்ணாடியை உடைத்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருவண்ணாமலையில் இருந்து கிளாம்பாக்கத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை திருவண்ணாமலை மாவட்டம் நெறையபட்டு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் இளஞ்செழியன் (47) என்பவர் ஒட்டி வந்தார். இந்த அரசு பேருந்தானது திண்டிவனம் அய்யந்தோப்பு சந்திப்பு பகுதியில் செஞ்சி – சென்னை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் பேருந்துக்கு வழி விடாமல் சாலையின் நடுவில் சென்றனர். இதனால் பேருந்து ஓட்டுனர் அவர்களை வழி விட அறிவுறுத்தும் விதமாக ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரு வாலிபர்கள் பேருந்தின் ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு மட்டுமல்லாமல் கல்லால் பேருந்தின் கண்ணாடியை உடைத்து அட்ரா சிட்டி ஈடுபட்டுள்ளனர். இதனை அப்ப பேருந்தில் பயணம் செய்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இது குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் ரோஷனை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து பயணி எடுத்த அந்த வீடியோவை கொண்டு திண்டிவனம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் குமரவேல்(22) மற்றும் திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் குணா(24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் . திண்டிவனத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் பேசி பேருந்து கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here