
விழுப்புரம் மாவட்டம் கடந்த சில மாதங்களாக ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டகுப்பம், கிளியனூர், பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் களவு போய்க்கொண்டிருந்த நிலையில் குற்றவாளிகள் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் கோட்டகுப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி உமாதேவி அவர்களின் மேற்பார்வையில் ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் திருமால், உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே திண்டிவனம் வழி பாண்டி மார்க்கமாக வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தபோது அந்த வழியாக வேகமாக அடுத்தடுத்து வந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர் வாகனங்களில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்ததில் 1.தமிழ் என்கிற தமிழ்ச்செல்வன் வயது 24 தந்தை பெயர் சஞ்சீவ் குமார், அம்பேத்கர் தெரு முருங்கை கிராமம் மரக்காணம் தாலுக்கா, 2.கிஷோர் வயது 22 தந்தை பெயர் ஜனார்த்தன பிள்ளையார் கோவில் தெரு அம்மணம் பாக்கம், திண்டிவனம், 3.ராகுல் வயது 24 தந்தை பெயர் காளிதாஸ் ஒலக்கூர் மெயின் ரோடு வைரபுரம் திண்டிவனம், 4.சந்து என்கிற சந்துகுமார் வயது 21 தந்தை பெயர் ரமேஷ் பிள்ளையார் கோவில் தெரு அம்மணம்பாக்கம், திண்டிவனம், என்பது தெரிய வந்தது இவர்கள் இரவு நேரங்களில் காரில் வீட்டில் வெளியே தனியாக இருக்கும் இரு சக்கர வாகனங்களை நோட்டமிட்டுச் சென்று களவு செய்ததாகவும், திருடிச் சென்ற வாகனங்களை விற்பனை செய்து அதன் மூலம் வந்த பணத்தைப் பெற்று வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று இன்ப வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.இவர்கள் 4 பேரும் புதுச்சேரி சென்று திரும்பும் போது போலீசாரிடம் பிடிபட்டனர்.4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 9 இருசக்கர வாகனங்கள் குற்றத்திற்கு பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.