இரவு நேரத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்தவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை தாக்கி தப்ப முயன்றவர்களை சுற்றி வளைத்த பொதுமக்கள் கைது செய்த போலீசார்

0
13
சுற்றி வளைத்த பொதுமக்கள்

திண்டிவனத்தில் இரவு நேரத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபர்கள் போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது பொதுமக்கள் உதவியுடன் போலீசில் பிடிபட்டனர்.

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு இரவு உணவு விடுதியின் அருகே வீச்சறிவாளர்களுடன் சிலர் பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு மயிலம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், குமரவேல் ஆகிய இருவரும் விரைந்து சென்றனர். அப்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பைக்கில் நின்றிருந்த இருவரை தனது செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற பொழுது அவர்கள் பேண்டில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுக்க முயன்றவுடன் சுதாரித்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் லேசாக பின்வாங்கிய சமயத்தில் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில் மற்றொரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் அதற்கு அடுத்த மற்றொரு சாலையோர இரவு உணவகத்தில் சென்னை பதிவு எண் கொண்ட பைக் உடன் நின்றிருந்த இருவரை பிடிக்க முயன்ற பொழுது அவரை சாலையில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மட்டும் சம்பவ இடத்திற்கு வந்ததால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. பொதுமக்கள் அங்கு கூடியதால் இரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் அவர்கள் உயிர் தப்பியது.

மேலும் அந்த சாலையோர உணவகத்தில் சென்னை பதிவு எண் கொண்ட நின்றிருந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்த போது இரு பைகளில் சுமார் 3 கிலோ அளவிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து காரில் இருந்த மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (36), மதுரை பரசுராமன்பட்டி, மதன்ராஜ் (38), சென்னை, எண்ணூர், விக்ரம் (25) என தெரிய வந்தது.

அதேபோல் பட்டாகத்தியுடன் அட்ரசிட்டியில் ஈடுபட்ட தெற்கு தாம்பரத்தை சேர்ந்த ஜீவா பிரகாஷ், நரேஷ் குமார் என தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து காரில் கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் மீது கஞ்சா கடத்தல் வழக்கும், பைக்கில் வந்த இருவர் மீது இரவு உணவு விடுதியில் தகராறு செய்ததாக வழக்கும் பதிவு செய்த மயிலம் காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய இருவரால் அப்பகுதியில் இரவு உணவகம் நடக்கும் கடைக்காரர்களும், பொதுமக்களும் மீண்டும் அங்கு வந்து தகராறில் ஈடுபடலாம் என அச்சத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here