
சென்னை செய்தியாளர் ராஜேந்திரன்
வெளி மாநிலத்தில் இருந்து சென்னை அரும்பாக்கம் பகுதிக்கு கடத்தி வந்த 350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!
4 பேர் கைது!!
சென்னை அண்ணா நகர்,
வெளி மாநிலங்களில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 நபர் களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 350 கிலோ குட்கா பொருட் களை பறிமுதல் செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் 100அடிசாலைவழியாகதமிழக அரசால் தடை செய்யப் பட்டகுட்கா பொருட்களை கடத்துவதாக அரும்பாக்கம் போலீசாருக்குரகசியதகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று மாலை அரும் பாக்கம் இன்ஸ்பெக்டர்பால சுப்பிர சுப்பிரமணியன்,குற்றப்பிரிவுஇன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ ரஜித்குமார், தலைமைக் காவலர் மணிவண்ணன் தலைமையிலானபோலீசார் 100 அடி சாலையில் ரோந்து பணியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக அதிவேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கிலோ கணக்கில் இருந்தது தெரிய வந்தது.
போலீசாரின் தீவிர விசாரணையில் திரு வொற்றியூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமு கம்(வயது 40) என்பது தெரியவந்தது, மேலும்அம்பத்தூர்அத்திபட்டி பகுதியில் இருந்து குட்கா பொருட்களை கொண்டு வருவதாக விசாரணையில் தெரிவித்தார்.
அவர் அளித்த தகவலின் படி போலீசார், அம்பத்தூர் அத்திப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து மூட்டை மூட்டையாக மொத்தம் 350 கிலோ குட்காபொருட்களைபறிமுதல் செய்து, குடோனில் பதுங்கி இருந்த கொளத் தூரைசேர்ந்த அருணாச்சலம்
(வயது31,)வியாசர்பாடியை சேர்ந்த மணிகுருசாமி(வயது 51), அசின் அகமது (வயது 20), ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் நால்வரும் வெளிமாநிலங்களில் இருந்து குட்கா புகையிலை பொருட்களைகடத்தி வந்து
அம்பத்தூர்அத்திப்பட்டு பகுதியில்உள்ளகுடோனை வாடகைக்கு எடுத்து அதில் பதுக்கி வைத்து அதனை சென்னை முழுவதும் விற்பனைசெய்து வந்தது தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ, ரூ.17 ஆயிரம் பணம், 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.