
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மக்கள் உரிமை மீட்க,தலைமுறை காக்க நடைபயண பிரச்சாரம் மேற்கொண்ட அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் மக்கள் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வருவது என்பது நமக்கு முக்கியமல்லை. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதே முக்கியம். வன்னிய மக்ககளுக்கும், சமூக நீதிக்கும் எதிராக செயல்பட்டு வரும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி கிடையாது. வன்னியர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் திமுகவுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் வன்னியர்கள் ஒருவர் கூட வாக்களிக்கக் கூடாது. திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையத்தை ஏரியில் கட்டுகிறார்கள்.பிந்நாளில் வரும் மக்களுக்கான பிரச்சனையை தவிர்க்க நான் வழக்கு தொடுத்துள்ளேன் என்றார்.மேலும் 6 மாத காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைவது உறுதி. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாம் நினைப்பது நிறைவேறும். வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு உண்டு. அனைத்து சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாமக பாடுபடும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மோ.ப.சங்கர் தலைமை தாங்கினார். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், முன்னாள் எம்பி தன்ராஜ், பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார், கிழக்கு மண்டல இணைப் பொதுச் செயலாளர் வைத்தி, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் ஜெயராமன், மாவட்டத் தலைவர் சேது, மாநில கொள்கை அணிவிளக்கச் செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, மாநில துணைத்தலைவர் சம்பத், மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், சிறுபான்மை பிரிவு பிச்சை முகமது, சஞ்சயப்பா, இளைஞரணி ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.