திண்டிவனத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

0
30

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு திண்டிவனம் வேளாண்மை துணை இயக்குனர் குமாரி ஆனந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் திட்ட விளக்க உரை வாசித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும்பொழுது விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்கும் முடியாது. இதனை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி விவசாயிகளுக்கு எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக விவசாய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்காகவே உழவர் சந்தையை கொண்டு வந்தார். அதேபோல் விவசாய விளைபொருட்களை அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் கொண்டு செல்ல வழிவகை செய்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்பினை வழங்கி உள்ளார் என பேசினார்.

தொடர்ந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய உபகரணங்கள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலாதேவி சேரன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், மரக்காணம் ஒன்றியக்குழு துணை தலைவர் பழனி, திண்டிவனம் நகர மன்ற உறுப்பினர் சதீஷ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும், வேளாண்மை துணை இயக்குனர் பிரேமலதா, விதையாய்வுத் துணை இயக்குனர் சரவணன், செயற்பொறியாளர் சுமதி, திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் துரைசாமி, பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் லெனின், விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், நடுக்குப்பம் இயற்கை இடுபொருள் உற்பத்தி மைய விவசாயி சீதாராமன், விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன், விழுப்புரம் வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் சுமதி, விதை சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை, அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மைய பேராசிரியர் மற்றும் தலைவர் வைத்தியலிங்கம், விழுப்புரம் வேளாண் விற்பனை குழு செயலாளர் சந்துரு, வல்லம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், மரக்காணம் வேளாண்மை உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ் மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இடுபொருள் நிறுவனங்கள் உள்ளிட்டோரி கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

வானூர் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here