
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் ரோடு டீக்கடை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில்
திண்டிவனம் போலீசார் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர்கள் கையில் போதை மாத்திரைகள் ஊசி மற்றும் செலைன் வாட்டர் வைத்திருந்த நபர்களை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்
திண்டிவனம் வட ஆலப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் இளந்திரையன் (26), திண்டிவனம் இந்திரா நகர் ரவீந்திர குமார் என்பவரின் மகன் ராகுல் (24), திண்டிவனம் சின்ன முதலியார் தெரு, நாகலாபுரம் உதயகுமார் என்பவரின் மகன் சூர்யா (23) ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
100 மாத்திரைகள்,
4 ஊசி, 2 செலைன் வாட்டர், 5 செல்போன்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.