
செய்தி ஆசிரியர்: துரைசோழன்
திண்டிவனத்தில்விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான வழிபாட்டாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 27/8/2025 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு துணைகண்காணிப்பாளர்கள் திண்டிவனம் பிரகாஷ், கோட்டகுப்பம் துணை கண்காணிப்பாளர் தேவி அவர்கள் தலைமையில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திண்டிவனம் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பான வழிபாட்டிற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் குறித்தும், விநாயகர் சிலை வழிபாடு அனுமதி குறித்தும், மூன்றாம் நாள் 29ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் குறித்தும் கரைப்பது குறித்தும், அதற்கான பாதுகாப்பு குறித்தும் விளக்க உரையாற்றினார். விநாயகர் சிலை வழிபாட்டாளர்கள் பாதுகாப்பாக விநாயகர் சிலை நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறி நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் காவல் துறை காவல்ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலை விழா வழிபாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.