
திண்டிவனம் அடுத்த சிங்கனூர் ஸ்ரீபத்மாவதி நாயிகா ஸமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூரில் அமைந்துள்ள ஸ்ரீபத்மாவதி நாயிகா ஸமேத ஸ்ரீநிவாஸப் பெருமாள் சன்னதியில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உற்சவமூர்த்தி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.