
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது இளைஞர்கள் கஞ்சா கடத்தி வருவது தெரியவரவே மூன்று இளைஞர்களையும் வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது ஏழு இளைஞர்கள் இணைந்து கஞ்சா கடத்தில் ஈடுபட்டது தெரிய வரவே, மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் வந்தவாசி சு.காட்டேரி கிராமத்தை சேர்ந்த, கவியரசு 23, சரத்பாபு19, சதீஷ் 20, விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவையை சேர்ந்த ரகுபதி 19,வெளிமேடு பேட்டையை சேர்ந்த குபேந்திரன்19, திண்டிவனம் கீழ் மலையனூர் பகுதியை சேர்ந்த வில்சன், தாதாபுரம் வெங்கடேசன் ஆகிய ஏழு பேர் என்ன தெரிய வந்தது. இதில் ஆறு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் நான்கு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பலில் தப்பி ஓடிய தாதாபுரம் வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர்.