
தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்யும் இது போன்ற கூட்டம் இளைய சமுதாயத்தை சீரழிப்பதுடன், தங்களது இளமைக் காலங்களையும் இழந்து நிற்கும் அவல நிலை இந்த விடியா திமுக ஆட்சியில் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மயிலம் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட பொழுது அங்கு சந்தேகப்படும் வகையில் KTM பைக்கில் நின்றிருந்த மூன்று பேரிடம் விசாரணை செய்ததில் அதே பகுதியை சரவணன் என்பதும், இவர் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் ஊசிகளை தன்னுடன் படித்த நண்பர்களான நெடிமோழியனூரை சேர்ந்த வசந்தகுமார், டி.கேணிப்பட்டு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோருக்கு சப்ளை செய்ததும், இவர்கள் மூன்று பேரும் போலீஸாருக்கு கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் திண்டிவனம் இந்திரா காந்தி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த திண்டிவனம் ஹரிஹரன், மணிகண்டன், ரோஷனை ஆலன், மேல்பாக்கம் சூர்யா ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
பிடிபட்ட ஏழு பேர் பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பிடிபட்ட நபர்களிடமிருந்து KTM பைக், 10 கிராம் கஞ்சா, செல்போன்கள் 4, போதை மாத்திரைகள் 22, ஊசி 6 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.