
திண்டிவனம் சேத்துக்கால் செல்லியம்மன் எனும் மூங்கில் அம்மனுக்கு 24 ஆம் ஆண்டு ஆடிப்பூரம் பால்குடம் ஊர்வலம் மற்றும் பால் அபிஷேக விழா நடைபெற்றது.
ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பக்தர்கள் மூங்கில் அம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்தும், தீச்சட்டி ஏந்தியும் மாடவீதி வழியாக ஊர்வலமாக வந்து பின் கோவிலை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.