
மயிலம் அருகே கொல்லியங்குணத்தில் அமைந்துள்ள பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. பவ்டா நிறுவனத்தலைவர் முனைவர் செ. ஜாஸ்லின்தம்பி அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்தார் கல்லூரியின் செயலர் திருமதி பிரபலா ஜெ. ராஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் செ. சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட செஞ்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர். முன்னாள் அமைச்சர் திரு K. S. மஸ்தான், MLA., அவர்கள் தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற்ற 762 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மயிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு C. சிவகுமார் MLA., அவர்கள் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வி. சேகர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் பவ்டா கல்விக் குழும இயக்குனர் முனைவர் ப. பழனி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் நிர்வாக அலுவலர் மற்றும் விளையாட்டு அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் திரு R. மோகனசுந்தரம், கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு R. டேவிட் ஆனந்த், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.