
#செய்தி ஆசிரியர் G. துரை சோழன் 9894518927
திண்டிவனத்தில் பாமகவின் புதிய செயல் தலைவராக பொறுப்பேற்ற ஸ்ரீ காந்தி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மகள் திருமதி ஸ்ரீகாந்தி அவர்களை நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அறிவித்திருந்தார். இந்நிலையில் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்திற்கு தனது தந்தையும், பாமக நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் வருகை புரிந்தார். அப்போது விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் பெரும் திரளான பாட்டாளி மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து வாழ்த்து கோஷம் எழுப்பி, மாலை அணிவித்தும், மலர்கள் தூவி சால்வை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் கேள்வி:நீங்கள் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு பாமகவினர் மத்தியில் வரவேர்பு எவ்வாறு இருந்தது?
பதில்: பாமகவினர் மத்தியில் வரவேற்பு சிறப்பாக உள்ளது, மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஐயா என்ன வேளை சொல்கிறாறோ அதன்படி செய்வேன்.
கேள்வி: சுற்றுபயணம் என்றையில் இருந்து தொடங்குகிறீர்கள்?
பதில்: இனிமேல்தான் பிளான் பண்ணனும்.
கேள்வி: தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்களுக்கு செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள நீங்கள் என்ன கூற விரும்புகிறீகள்?
பதில்: கட்சி நல்லா பண்ணனும்,கட்சியின் வளர்ச்சிக்கு ஐயா சொல்வதை கேட்டு நல்லா வேளை செய்யனும்.
கேள்வி: பிரிந்து சென்றவர்களை சேர்த்துக் கொள்வதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா ?
பதில்: எல்லாமே ஐயா பார்த்துக் கொள்வார். இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.