
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புரியனூரில் நடந்த “உங்களுடன் ஸ்டாலின் ” திட்ட முகாமை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் புலியனூர், தனியல் ஆகிய கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் காப்பீட்டு அட்டை, ஆதார் புதுப்பித்தல், மருத்துவ பரிசோதனைகள், வேளாண்துறை சார்ந்த கோரிக்கைகள், பட்டா மாற்றம், மின் இணைப்பு மாற்றம், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அரசு சார்ந்த அனைத்து துறைகளிலும் பொதுமக்களின் குறைகள் மனுக்களாக பெறப்பட்டது.
முகாமில் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் வரவேற்றார்.
செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான், மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, வழக்கறிஞர் சேதுநாதன், மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர் ஆகியோர் முகாம் குறித்து விளக்கி பேசினர்.
முகாமில் மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி குமரேசன்,
தீவனூர் சம்சுதீன், சேகர், வெங்கந்தூர் ராம்குமார், சேகர், நடுவனந்தல் சேகர், ஆசூர் பிரபு, உதயவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சுகாதாரத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவப் பெட்டகம், கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் ஆகியவற்றை வழங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் நன்றி கூறினார்.