
திண்டிவனம் அருகே மர்ம விலங்கு கடித்ததில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
பத்துக்கு மேற்பட்ட ஆடுகள், ஒரு கன்று குட்டி பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஏழுமலை – செல்வி தம்பதியினர் சுமார் 45 ஆடுகளை பட்டியில் வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் காலை எப்பொழுதும் போல் விவசாய நிலத்திற்கு வந்த செல்வி ஆட்டுப்பட்டியில் உள்ள ஆடுகளுக்கு இறை வைப்பதற்காக சென்றார் அங்கு ஆடுகள் மர்ம விலங்கால் கடிபட்டு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆசூர் பகுதியில் இதே போன்று 40-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அப்பகுதி மக்கள் இது மர நாயாக இருக்கலாம், கழுதை புலியாக இருக்கலாம், காட்டு வவ்வாலாக இருக்கலாம் எது என்று தெரியவில்லை மர்மமாகவே இருக்கிறது மர்ம விலங்கு பற்றி வனத்துறையினர் விரைந்து கண்டறிந்து எங்கள் வாழ்வின் ஆதாரமாக விளங்கும் எங்கள் வளர்ப்பு கால்நடைகளை மர்ம விலங்கிடம் இருந்து காத்து கொடுக்கும்படி கோரிக்கை வைக்கின்றன.
மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.மாசிலாமணி விசாரித்து ஆறுதல் கூறினார். இதில் ஒலக்கூர் செயலாளர் ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி ஊராட்சி மன்ற தலைவர் பூமி லிங்கம் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாகரன் முன்னாள் கிளைக் கழக செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்
.