மின்தடை18/09/2025 வியாழக்கிழமை இளமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாத பராமரிப்பு பணி

0
21

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செயற்பொறியாளர் S. சிவசங்கரன் தனது செய்தி குறிப்பில் திண்டிவனம் கோட்டம், 110/33-11 கிலோவோல்ட் இளமங்கலம் துணை மின்நிலையத்தில் 18.09.2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை இளமங்கலம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட இளமங்கலம், வடசிருவளூர், ரெட்டனை, புலியனூர், மேல் ஒலக்கூர், கட்டாஞ்சிமேடு, தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், ஊரல், கொள்ளார், பெலாகுப்பம், சிப்காட் மற்றும் சிட்கோ திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும் என்பதையும் மேலும்
மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here