
முட்டியூர் கிராமம் ஓம் அம்மச்சார் அம்மன் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு 13 ஆம் ஆண்டு திருவிழா.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் முட்டியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் அம்மச்சார் அம்மன் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரனுக்கு 13 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு காலை குளக்கரையில் கரகம் ஜோடித்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கரகம் கிராம வீதி வழியாக வலம் வந்து ஸ்ரீ அமைச்சர் அம்மனுக்கு சாகை வார்த்தால் என்னும் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. மேலும் மாலையில் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அம்மச்சார் அம்மன் மற்றும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகர் பக்தர்களுக்கு ரம்யமாக காட்சியளித்தனர். தொடர்ந்து புஷ்ப விமானத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.