
புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவிப்பு
26-09-2025, திண்டிவனம் – முன்னணி மென்பொருள் நிறுவனம் AEUIO Industries Pvt. Ltd. மற்றும் கோவிந்தசாமி அரசுகலை கல்லூரி இணைந்து தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், நவீன தொழில்நுட்ப உலகிற்கு மாணவர்களை தயாரிப்பதில் ஒரு முக்கியமான படியாகும். AEUIO Industries Pvt. Ltd. என்பது எதிர்காலத்துக்கான புதிய தலைமுறை தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் நிறுவனம். அதன் சேவைகள்:
• சாப்ட்வேர் ஆர்கிடெக்சர் கன்சல்டிங் (Software Architecture Consulting)
• கிளவுட் சேவைகள் மற்றும் பராமரிப்பு (Cloud Services & Maintenance)
• சூப்பர் இன்டலிஜென்ஸ் AI/ML பயன்பாடுகள் (Super Intelligence with AI/ML Applications)
• தனிப்பயன் பயன்பாடுகள் & ஈ-காமர்ஸ் இணையதளங்கள் (Custom Application Development & E-Commerce Websites)
• IOT மற்றும் UAV / ட்ரோன் மாடலிங் (IoT & UAV / Drone Modeling), குறிப்பாக விவசாயத்தில் உரம் பாசனம் செய்யும் ட்ரோன்கள்
விழாவில், கல்லூரி முதலவர் பேராசிரியர் முனைவர் R. நாராயணன், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை பேராசிரியர் முனைவர் விஜயலக்ஷ்மி, AEUIO Industries CEO திருமதி வாணிஸ்ரீ, மற்றும் COO திருமதி ஷோபனா பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
AEUIO Industries CEO திருமதி வாணிஸ்ரீ தெரிவித்தார்:
“எங்கள் நிறுவனம் எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. மாணவர்களுக்கு தொழில்துறையின் தகுதியான அனுபவத்தை வழங்குவதன் மூலம், அவர்களை உலகளாவிய தொழில்நுட்ப சந்தைக்கு தயாரிப்பதே எங்கள் நோக்கம்.”
இதன் பகுதியாக, AEUIO Industries Pvt. Ltd. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமையும் நடத்தி, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. விழா மாணவர்களுடன் நிறுவன பிரதிநிதிகளின் சந்திப்பும், அடுத்த வேலைவாய்ப்பு முகாமின் அட்டவணை அறிவிப்பும் கலந்து சிறப்பிக்கப்பட்டது.