
விழுப்புரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுகவினர் உயிர்நீத்த 22 மாணவிகளுக்காக
கண்ணீர் அஞ்சலி .
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே விழுப்புரம் மாவட்ட மாணவரணி சார்பில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் தங்கள் இன்னுயிரை இழந்த 22 மாணவ, மாணவியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், விழுப்புரம் நகரக் கழக செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், கோலியனூர் ஒன்றிய கழக செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர் சி.வி சண்முகம் எம்பி நீட் தேர்வால் உயிர் நீத்த மாணவ மாணவியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி கண்டன உரையாற்றினார்கள். இதில் மாநில நிர்வாகிகள் அற்புதவேல், பாலசுந்தரம், ஏழுமலை, மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், வெங்கடேசன், தமிழ்ச்செல்வி செல்லபெருமாள், ஜெயபிரகாஷ், டாக்டர் முத்தையன், லட்சுமி நாராயணன், ஸ்ரீதர், கோகுல்ராஜ் உள்ளிட்ட மாவட்ட ,நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி கண்டன கோஷமிட்டனர்.